விஜயகாந்துக்கு நெருங்கிய நடிகரை திட்டமிட்டு அவமானப்படுத்திய வடிவேலு.. இவ்வளவு கீழ்த்தரமான எண்ணமா? - உண்மையை போட்டுடைத்த  திரைப்பிரபலம்..!! 



Actor Meesai Rajendran About Vadivelu

ரமணா திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான நடிகர் மீசை ராஜேந்திரன். இவர் கடந்த 1990-களில் இருந்து விஜயகாந்துடன் பயணிக்க தொடங்கி, அவர் கட்சி தொடங்கிய சமயத்தில் உறுதுணையாக இருந்து இன்று வரை விஜயகாந்துக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த போது, வடிவேலு தன்னை அவமானப்படுத்திய நிகழ்வு குறித்து மனம்திறந்து பேசினார். "நடிகர் மீசை ராஜேந்திரன் ஏவிஎம் நிறுவனத்திற்கு டப்பிங்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த வடிவேலு மீசை ராஜேந்திரனை கண்டு, நாளை ஒரு படப்பிடிப்பு இருக்கிறது. 

Vadivelu

அதில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும். நாளை காலை 7:00 மணிக்கு சூட்டிங் இடத்திற்கு வந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து காலை 7 மணியளவில் சரியாக மீசை ராஜேந்திரன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விட்ட நிலையில், அங்கு வடிவேலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காட்சியை நடித்துக் கொண்டிருந்தார்.

பொறுத்து பார்த்த மீசை ராஜேந்திரன் நடிகர் வடிவேலுவிடம் சென்று என்ன? என்று கேட்கவே அதற்கு வடிவேலு, இரண்டு சேர் மீது அமர்ந்து கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து, 'நீங்கள் விஜயகாந்துடன் இருப்பவர். உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடையாது' என்று கூறியுள்ளார். 

Vadivelu

இதனைக் கேட்டு மனமுடைந்து போன மீசை ராஜேந்திரன், 'என்னைப்போல இனி யார் ஒருவருக்கும் செய்யாதீர்கள். நான் எனது வேலையை கவனித்துவந்தேன். நீங்கள்தான் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி அழைத்து அவமானப்படுத்தி இருக்கிறீர்கள். இது நல்லதல்ல என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் இரண்டுநாட்கள் கழித்து தேமுதிக அலுவலகத்திற்கு சென்ற நிலையில்,  அங்கு விஜயகாந்த் மீசை ராஜேந்திரனை அழைத்துள்ளார். மேலும் இது குறித்து மீசை ராஜேந்திரன் வெளியில் சொல்லாத நிலையில், படபிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் விஜயகாந்த் காதுவரை இந்த தகவலை கொண்டு சேர்த்துள்ளனர்.

அப்போது விஜயகாந்த் சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலு நடித்த போது அவருக்கு உடுத்த உடை கூட கிடையாது. 8 ஜோடி வேட்டி சட்டை நான் வாங்கி அவருக்கு கொடுத்தேன். நான் இதை வெளியே சொல்லகூடாது. இருப்பினும் நீ அங்கு அவமானப்பட்டதால் இந்த உண்மையை உனக்கு சொல்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்" என்று கூறினார்.