மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகரா??
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், மகேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கொரோனா பிரச்சனையால் படம் ரிலீஸாவது தள்ளிப்போய் கொண்டிருந்த நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் குவித்தது. இப்படத்தில்
விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
மேலும் குட்டி பவானியாக நடித்த மகேந்திரனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. இத்தகைய வலிமையான பவானி கதாபாத்திரத்தில் முதலில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ்தான் நடக்கவிருந்தாராம். ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது என தகவல்கள் பரவி வருகிறது.