ரஜினியின் நெருங்கிய நண்பர், மூத்த நடிகருக்கு உடல்நலக்குறைவு; தனியார் மருத்துவமனையில் அனுமதி.!
நடிகர் ரஜினிகாந்துடன் பல படங்களில் நடித்த நடிகர் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிய பல படங்களில் 90-களில் கதாநாயகன் மற்றும் கதாநாயகனின் நண்பர் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமான மூத்த நடிகர் சரத் பாபு.
இவர் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்து வெளியான அண்ணாமலை, அருணாச்சலம் ஆகிய படங்கள் இன்றளவும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். இவர் சென்னையில் தற்போது வசித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது 71 வயதாகும் நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்.