மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் டிரைலர் நாளை வெளியீடு: படக்குழு அறிவிப்பு.!
ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் அயலான் (Ayalaan). பூமிக்கு வரும் ஏலியன் மற்றும் அதன் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் மனிதர்களுக்கு இடையேயான சண்டை தொடர்பான காட்சிகள் படத்தில் இடம்பெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், டேவிட் ப்ரோட்டன்-டேவிஸ், பானுப்ரியா, பாலசரவணன், கோதண்டம், ராகுல் மாதவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் அயலான் படத்தின் இசை வெளியீடு விழா நடைபெற்றது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெற்றிக்கு பின், அயலான் படத்தின் 2ம் பாகமும் தயாராகும் என இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அயலான் திரைப்படத்தின் டிரைலர் நாளை (5 ஜனவரி 2024) அன்று வெளியாகிறது. இந்த அறிவிப்பை படக்குழு உறுதி செய்துள்ளது.
JBR Beach, Dubai, lights up for #Ayalaan 👽
— KJR Studios (@kjr_studios) January 3, 2024
Get ready for a night of intergalactic experience with a dazzling spectacle under the giant wheel lights. A chance to catch our cast in action at the grand trailer launch.🎡#AyalaanTrailer from January 5 🛸#AyalaanFromPongal🎇… pic.twitter.com/SHEPZq1Un5