#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
ஸ்ரீவி: முயல் வேட்டை சென்றவருக்கு, மின்வேலியில் காத்திருந்த எமன்; மின்சாரம் தாக்கி பரிதாப பலி.!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், மேற்குத்தொடர்ச்சி மலையில், மேகமலை புலிகள் காப்பகமானது அமைந்திருக்கிறது. இங்கு யானை, புலி, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உட்பட பல பல விலங்குகள் வசித்து வருகின்றன.
அவ்வப்போது மலை அடிவார பகுதிக்கு வரும் வனவிலங்குகள், விவசாய நிலங்களில் புகுந்து விளைபொருட்களை சாப்பிட்டு செல்வதும் நடக்கும். இதனிடையே, மேற்குதொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள தொட்டியபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மாரியப்பன்.
மின்வேலி அமைத்தார்
இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தக்காளி, வெங்காயம் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்கிறார். இதனிடையே, இரவு நேரத்தில் விலங்குகள் விவசாய நிலத்துக்குள் வராமல் இருக்க வேலி அமைத்துள்ளார்.
இதையும் படிங்க: விருதுநகர்: கள்ளக்காதல் வயப்பட்ட கணவனை வெறுப்பேற்ற நாடகம், கொலையில் முடிந்த சோகம்.. பறிபோன உயிர்.!
அதில், விதியை மீறி மின்சாரம் பொருத்தி வைத்ததாகவும் தெரியவருகிறது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் வசித்த வரும் முருகன், முயல் வேட்டைக்ஸ் சென்றுள்ளார். அப்போது, மின்சார வேலியில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இராஜபாளையம்: "குடிக்காத பேரான்டி" - அறிவுரை கூறிய பாட்டி தலையில் கல்லைப்போட்டு கொடூர கொலை.. 25 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்.!