மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்தடுத்த படங்களில் இருந்து நடிகர் சூர்யா விலகல்!.. பாலாவை தொடர்ந்து வெற்றிமாறனுடன் மோதலா..!
வாடிவாசல் படத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இந்த படத்தில் இருந்தும் சூர்யா விலக முடிவு செய்து இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்திலிருந்து சூர்யா சமீபத்தில் விலகியது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படந்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் சூர்யாவும் படப்பிடிப்பில் நடித்து வந்தார். இந்நிலையில் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்யை நடிக்க இருப்பதாகதகவல் வெளியானது. இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த வாடிவாசல் படத்தில் இருந்தும் சூர்யா விலக முடிவு செய்து இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே வாடிவாசல் படத்தை எடுப்பதற்கான அறிப்பை வெளியிட்டிருந்தனர்.
பட வேலைகள் இன்னும் தொடங்காத நிலையில், படக்குழுவினர் தரப்பில் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகவில்லை என்றும், வாடிவாசல் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவித்தனர். சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார்.