பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் சூர்யா பார்த்த முதல் வேலை மற்றும் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா! நேருக்கு நேர்’
திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இந்த வருடம் ரிலீஸான `தானா சேர்ந்த கூட்டம்’ படம் வரைக்கும், பல வித்தியாசமான படங்களை குடுத்து மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சூர்யா.
சரவணன் என்பதுதான் இவரது இயற் பெயர். சினிமாவிற்கு வந்தபிறகு சூர்யா என தனது பெயரை மாற்றிக்கொண்டார். இதுபோன்று மேலும் பல சுவாரசியமான விஷயங்களை பாக்கலாம் வாங்க.
B.COM படிப்பை முடித்த சரவணன் முதலில் வேலை பார்த்தது ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில்தான். கார்மெட்ன்ஸில் தான் வாங்கிய முதல் சம்பளமான 1,200 ரூபாயில், ஆரஞ்சு நிறப் புடவையைத் தன் தாய் லட்சுமிக்கு வாங்கிக் கொடுத்தார்.
நடிக்க வருவதற்கு முன்பு கார்மெண்ட்ஸில் வேலைபார்த்த சூர்யாவின் மிகப்பெரிய கனவு தனியாக நிறுவனம் ஓன்று தொடங்க வேண்டும் என்பதுதான். இதற்காக வங்கியில் கடன் வாங்க நினைத்த சூர்யா தான் கடன் வாங்கினால் அது தனது குடும்பத்தை பாதிக்குமோ என நினைத்து அந்த முயற்சியை கைவிட்டார்.
அந்த சமயத்தில்தான் இயக்குநர் மணிரத்னத்திடமிருந்து சூர்யாவுக்கு நடிக்க அழைப்பு வந்தது. அதுதான் வசந்த் இயக்கிய `நேருக்கு நேர்’ திரைப்படம். நேருக்கு நேர் திரைப்படம் தொடங்கி இன்று தான சேர்ந்த கூட்டம் வரை தனது திறமைகளை பல விதங்களில் நிரூபித்துள்ளார் நடிகர் சூர்யா. அவரது பனி சிறக்க தமிழ் ஸ்பார்க் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.