மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலிவுட்டுக்கு சென்றதும் அடையாளத்தை மாற்றிய விஜய் சேதுபதி; கத்ரினாவுடன் கியூட் போஸ் வைரல்.!
தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியாகவுள்ள திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ் (Merry Christmas). ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் (KatrinaKaif & VijaySethupathi ) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடிக்க படம் உருவாகியுள்ளது.
.@VijaySethuOffl and #KatrinaKaif at #MerryChristmas promo launch pic.twitter.com/FEuL4jyeoQ
— Faridoon Shahryar (@iFaridoon) January 4, 2024
படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் வெளியீடு தள்ளிப்போனது. கடந்த 2021ல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டாலும், 3 ஆண்டுகளுக்கு பின்னர் படம் வெளியாகவுள்ளது.
ஜனவரி 12, 2024 அன்று மேரி கிறிஸ்துமஸ் படம் திரையில் வெளியாகிறது. படத்தின் ப்ரோமோசன் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் டிரைலர் காட்சிகள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், படக்குழு மும்பையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தது. இந்த சந்திப்பின் போது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Katrina Kaif shares her first interaction with #Vijaysethupathi during their first meeting during Merry Christmas #KatrinaKaif @VijaySethuOffl @VijaySethu_FC pic.twitter.com/dpeVT3WQXy
— Srabanti Chakrabarti (@srabantic) January 4, 2024
அப்போது விஜய் சேதுபதி ஒருபக்கம், கத்ரீனா ஒருபக்கம் இருந்தனர். கத்ரீனா அவரை அருகில் அழைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வைத்தார். பாலிவுட்டுக்கு சென்றதும் நடிகர் விஜய் சேதுபதியும் தனது இயல்பு தோற்றத்தை மாற்றி பார்க்கவே கியூட்டாக இருக்கிறார்.
மேரி கிறிஸ்துமஸ் ட்ரைலர்: