தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வரலாறு குறித்து கேள்விக்கு அரங்கமே அதிரும் விடைகொடுத்து விக்ரம்; தமிழன்னா சும்மாவா?..!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், விக்ரம், பார்த்திபன், சரத்குமார் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அத்துடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் இப்படம் நேரடியாக வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் பல மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது பத்திரிகையாளர் வரலாற்றை தெரிந்து கொள்வது எந்த அளவுக்கு முக்கியமானது? என்று கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த விக்ரம், "தஞ்சாவூரில் சோழர்கள் அமைத்த பெரியகோவில் இன்றளவும் உலக அளவில் கவனிக்கப்படுகிறது. சோழர்கள் அதனை கட்டும்போது எத்தகைய நிலநடுக்கம் வந்தாலும், அது தாங்கும் அளவிற்கு தொழில்நுட்பத்தை உபயோகம் செய்து கட்டியுள்ளனர்.
அந்த இடத்தில் இதுவரையிலும் சிறிய குன்றுகூட இல்லாத நிலையில், பெரிய பெரிய ராட்சத கற்களை மேல் ஏற்றியது எப்படி? என்றது இன்றளவும் கேள்விக்குறியாக இருக்கிறது. அந்தகாலகட்டத்தில் அவ்வளவு பெரிய எடையுள்ள கற்களை வைத்து கோவிலை கட்டியுள்ளனர். இதனைப் போல கடல்கடந்து அவர்கள் வணிகம் செய்தார்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீனா, கம்போடியா போன்ற நாடுகளிலும் வணிக தொடர்பு வைத்துள்ளனர். கொலம்பஸ் காம்பஸை கண்டறிந்ததாக குறிப்புகள் கூறும் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே, தமிழர்கள் இந்த உலகத்தை ஆண்டுவிட்டார்கள். இவ்வளவு பெருமை மிக்க இந்திய மண்ணில் நாம் வசிக்கிறோம். இத்தகைய வரலாறுகள் நமக்கு மிகவும் முக்கியம்" என்று கூறியுள்ளார்.