Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
வெளியான விஷாலின் அதிரடியான அயோக்யா டீசர்; ரசிகர்கள் உற்சாகம்.!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக திகழும் நடிகர் விஷால் நடிப்பைத் தவிர நடிகர் சங்கத்தின் செயலாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்.
மேலும் விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நாம் ஒருவர் என்ற சமூக நிகழ்ச்சியை மற்றவர்களுக்காக உதவும் உயர்ந்த நோக்கில் செய்தார்.
செல்லமே என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் விஷால் தற்போது 25 படங்களில் நடித்து முடித்துவிட்டார். ‘சண்டகோழி-2’ படத்துக்கு பிறகு தனது 26 வது படமான ‘அயோக்கியா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். இதில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.