Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
நடிகர் விஷாலின் கார் ஓட்டுநர் மரணம். பலவற்றை சிந்திக்கும் விஷாலுக்கு தனது மகனை பற்றி சிந்திக்க நேரமில்லை! இறந்தவரின் தந்தை கண்ணீர் பேட்டி!
நடிகர் சங்க செயலாளர், தரிப்பாளர் சங்க தலைவர், தயாரிப்பாளர், நடிகர், தற்போது அரசியல் என பல வேளைகளில் பிஸியாக இருப்பவர் நடிகர் விஷால். இந்நிலையில் உடல் நலக்குறைவால் நடிகர் விஷாலின் கார் ஓட்டுநர் பாண்டியராஜன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.
தனது மகனின் மரணம் பற்றி அவரது தந்தை கூறுகையில் விஷாலிடம் இருந்து உரிய நேரத்தில் என் மகனுக்கு உதவி கிடைக்கவில்லை என்றும், அவ்வாறு உதவி கிடைத்திருந்தால் நான் என் மகனை காப்பாற்றியிருப்பேன் என்றும் கண்ணீர்மல்க கூறினார்.
இந்த செய்தி வலைத்தளங்களில் தீயாக பரவியதை அடுத்து மக்கள் அனைவரும் நடிகர் விஷாலை தங்களது கேள்விகளால் வெளுத்தது வாங்கியுள்ளார். கட்சியை பார்க்க நேரம் இருக்கு, நடிகர் சங்கத்தை பார்க்க நேரம் இருக்கு, தயாரிப்பாளர் சங்கத்தை பார்க்க நேரம் இருக்கு ஆனால் தன் கூடவே இருக்கும் கார் ஓட்டுனரின் மீது அக்கறை இல்லையா என கேள்விகளை எழுப்பியுள்ளனர்.