Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
நான்கு நாட்களில் நிச்சயதார்த்தம் இருக்க விஷாலுக்கு திடீரென ஏற்பட்ட சோகம்! என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். நடிப்பையும் தாண்டி நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் பிசியாக உள்ளார் நடிகர் விஷால். தற்போது அயோக்கியா படத்தில் பிசியாக நடித்துவருகிறார் விஷால். இந்நிலையில் நடிகர் விஷாலுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷாவிற்கும் திருமணம் என செய்திகள் வெளியாகி வைரலானது.
இதை நடிகர் விஷாலும் உறுதி செய்தார். மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு வருங்கால மனைவியுடன் நெருக்கமான புகைப்படத்தையும் பதிவிட்டார் விஷால். இந்நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் விஷாலுக்கும், அனிஷாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
நிச்சயதார்த்தம் ஒருபுறம் இருக்க, அயோக்கியா படத்தில் கடைசியாக மிச்சம் இருந்த ஒரு குத்து பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் படப்பிடிப்பின் போது விஷாலுக்கு காலில் அடிபட்டதால் தற்போது அவருடைய கால் வீங்கி உள்ளது. இதனால் நடப்பதற்கு கூட விஷால் சிரமப்பட்டு வருகிறாராம்.
இன்னும் நான்கு நாட்களில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள நிலையில் விஷால் காலில் அடிபட்டு அவர் அவஸ்தை படுவதை பார்த்து படக்குழுவினர் ரொம்ப பீல் பண்ணி வருகிறார்களாம்.