தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
"எஸ்.ஜே. சூர்யாவிற்கு இப்படியோரு மன நோயா.. உண்மையை கூறிய விஷால்
இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர், எஸ் ஜே சூர்யா. அஜித் நடித்த 'வாலி' திரைப்படத்தில் தான் எஸ்.ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து விஜயை வைத்து இவர் இயக்கிய 'குஷி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரும் வெற்றி அடைந்தது. தற்போது படம் இயக்குவதை நிறுத்தி விட்டு, நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் எஸ்.ஜே சூர்யா, சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், செப்டம்பர் 15ம் தேதி வெளியான 'மார்க் ஆன்டனி' படத்தில் விஷாலுடன் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். இந்தப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தில், எஸ். ஜே,சூர்யா ஐந்து குரலில் மாற்றி பேசி அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "எஸ்.ஜே சூர்யாவிற்கு ஓசிடி என்னும் மனநல பிரச்சனை உள்ளது" என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.