Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
20 ஆண்டுகளுக்குப் பிறகு.. மீண்டும் உலகநாயகனுடன் இணையும் பிரபல நடிகை.! அந்த படமே செம ஹிட்டாச்சே.!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் வீடியோ நடிகர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
தக் லைஃப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை அபிராமி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை அபிராமி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கமலின் 'விருமாண்டி' படத்தில் ஹீரோயினாக நடித்தவர். விருமாண்டி திரைப்படம் அவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகை அபிராமி கமலுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும், ஜனவரி மாதம் தொடங்கும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.