திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இளம் வில்லன் நடிகருடன் கைகோர்க்கும் அதிதி ஷங்கர்.! வைரலாகும் புகைப்படம்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வருபவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர். முதல் படத்திலேயே இவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பின் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா என்ற படத்தில் நடித்துள்ளார்.
பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
தொடர்ந்து தற்போது நடிகை அதிதி சங்கரின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் ஹீரோவாக கைதி படத்தில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களை மிரள வைத்து, தற்போது ஹீரோவாக அவதாரமெடுத்து அசத்தி வரும் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.
இதையும் படிங்க: என்னது..பிரேமம் படத்தில் முதலில் மலர் டீச்சராக நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகையா?? இயக்குனர் வெளியிட்ட தகவல்!!
அர்ஜுன் தாஸு டன் இணையும் அதிதி ஷங்கர்
இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் படத்தின் தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர். மேலும் படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அர்ஜுன் தாஸ்- அதிதி ஷங்கர் இணையும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை வரலட்சுமி திருமணம்.! அதுவும் எங்கு தெரியுமா?? வைரலாகும் புகைப்படங்கள்!!