மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சித்தார்த்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலை உறுதி செய்த அதிதி ராவ்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சித்தார்த். இவர் தமிழில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரை துறையில் நிலைநாட்டி இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது.
இது போன்ற நிலையில் இவர் நடிகை அதிதி ராவ் என்பவரை காதலிப்பதாக பல வருடங்களாக திரைத்துறையில் பேசப்பட்டு வந்தது. இதையடுத்து இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்து விட்டதாக செய்திகள் இணையத்தில் வேகமாக பரவ தொடங்கின. இவர்களின் காதலை உறுதிப்படுத்தும் வகையில் பல இடங்களுக்கும், திரைப்பட விழாக்களுக்கும் ஒன்றாக சென்று வந்தனர்.
இது போன்ற நிலையில் நடிகை அதிதி ராவ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்தார்த்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு "நிச்சயதார்த்தம் நடந்ததாக அவர் கூறினார்" என்று குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இத்தனை வருடங்களாக வெளியில் எதுவும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்த சித்தார்த், அதிதி ராவ் ஜோடிகள் தற்போது இணையத்தில் பதிவிட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.