திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையா இந்த குழந்தை.. யார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டி இருக்கிறார்.
முதன் முதலில் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'சூப்பர்' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் வெற்றியடைந்ததற்கு பின்பு தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்து வெளியான 'இரண்டு' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படமே மிகப் பெரும் வெற்றியடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அனுஷ்கா பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
இவ்வாறு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளிலும் பிஸியான நடிகையாக இருந்து வந்த அனுஷ்கா தனது உடல் எடை அதிகரித்ததன் காரணமாக தற்போது திரைத்துறையில் இருந்து சற்று பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார்.
மேலும் 2015 ஆம் ஆண்டு பாகுபலி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் இவரின் திரை பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது. இது போன்ற நிலையில் அனுஷ்காவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனுஷ்கா சிறுவயதிலும் இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.