மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன இப்படி இருக்கு?.. இதெல்லாம் ஒரு பாட்டா - சூப்பர்ஸ்டாரிடம் ஓபனாக உண்மையை கூறிய குஷ்பூ..! சிதறவிட்ட ரசிகர்கள்..!!
தமிழில் வெளியான தர்மத்தின் தலைவன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை குஷ்பூ. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே நடிப்பு, அழகுனால் ரசிகர்களால் கவரப்பட்டார். ரஜினி, கமல் என 80sகளில் பல திரைப்படங்களில் இவர் தொடர்ந்து நடிகையாக நடித்து வந்தார்.
இவருக்கு பூர்வீகம் மும்பை என்றாலும் தமிழை முறையாக கற்றுக்கொண்டு சொந்த குரலில் விரைவில் டப்பிங் பேசி நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற படங்களிலும் இவர் நடித்தார்.
தற்போது அரசியல்வாதியாக இருக்கும் குஷ்பூ தொடர்ச்சியாக பல படங்களில் ஹிட் கொடுத்தவர். கமலோடு மைக்கேல் மதன காமராஜன், சிங்காரவேலன், ரஜினியோடு அண்ணாமலை, மன்னன், பாண்டியன் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலை திரைப்படம் ரஜினியின் வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படம் என்றும் கூறலாம். இந்த படத்தில் கதாநாயகியாக குஷ்பூ நடித்திருந்தார். இந்த படத்தில் இருக்கும் பாடல்கள் இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்ட வந்தது.
அதேபோல கொண்டையில் தாழம்பூ பாடலை வைரமுத்து எழுதி இருந்தார். இந்த படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை அண்ணாமலை பாடல் மற்றும் கொண்டையில் தாழம்பூ பாடல் ஆகியவற்றை கேட்ட குஷ்பூ, அண்ணாமலை பாட்டு நன்றாக உள்ளது.
ஆனால் கொண்டையில் தாழம்பூ பாடல் என்ன இப்படி உள்ளது? என்று ரஜினியிடம் கேட்க, நீங்கள் தியேட்டரில் ரெஸ்பான்ஸை பாருங்கள் என்று அவர் கூறியுள்ளார். படம் ரிலீஸ் ஆன பின்னர் குஷ்பூ தியேட்டருக்கு சென்று பார்க்கும் போது பலரும் சில்லறைகளை சிதறவிட்டு ஆரவாரம் செய்து இருக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.