#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
அடக்கடவுளே.. குஷ்பூவுக்கு சரிசெய்ய இயலாத நோயா?.. 8 மாதத்தில் 2 முறை சர்ஜரி செய்ய என்ன காரணம்?..! ரசிகர்கள் பேரதிர்ச்சி..!!

சமீபத்தில் நடிகை மற்றும் அரசியல்வாதியான குஷ்பூ குறித்து தகவல் ஒன்று சமூகவலைதளங்களில் பரவியது. 90sகளில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை குஷ்பூ.
இவர் தற்போது சின்னத்திரைகளில் குணசேத்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து முழுநேர அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.
கடந்தாண்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், சாதாரண சூழ்நிலைக்கு திரும்பிய குஷ்பூ மீண்டும் மார்ச் மாதத்தில் மற்றொரு நோயால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், அவர் முழுமையாக குணமடைய இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.