Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
இது ஏற்றுக்கொள்ளவே முடியாத அலட்சியம்.! ரயில் விபத்து குறித்து பிரபல நடிகை விளாசல்.! வைரலாகும் பதிவு!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில், சென்னை நோக்கி வந்த கோரமண்டல் அதிவிரைவு இரயில், பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி பயணித்த துரந்தோ இரயில் மற்றும் சரக்கு இரயில் தடம்புரண்டு மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் இருந்து வருகிறது. இந்த கோர விபத்து உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், மக்கள் பலரும் வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Devastating! Unacceptable negligence.. https://t.co/QvpKfxBVTN
— Priya Anand (@PriyaAnand) June 3, 2023
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியா ஆனந்த் ரயில் விபத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர், மனம் உடைந்து போய் விட்டது.. இது ஏற்றுக் கொள்ள முடியாத அலட்சியம் என விளாசி டுவிட் செய்துள்ளார். அதற்கு ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.