53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கூடவே இருந்து கவனிச்சாரு.! நடிகை ரச்சிதா வீட்டில் நேர்ந்த பெரும் துயரம்.! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்து அறிமுகமானவர்தான் நடிகை ரச்சிதா.அதனை தொடர்ந்து அவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். அதில் ஹீரோக்கள் மாறினாலும் பல சீசன்களிலும் மீனாட்சியாக ரச்சிதாவே நடித்து மக்களின் மனதை கவர்ந்தார். அவருக்கென ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.
நடிகை ரச்சிதா பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகிய ஜோடியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவருக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு விவாகரத்து ஆகாத நிலையில், ரச்சிதா கடந்த சில மாதங்களுக்கு முன் தினேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார்.
நடிகை ரச்சிதாவின் தந்தை கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் உடல்நலம் சரியில்லாத தனது தந்தையை ரச்சிதா அருகில் இருந்து கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் காலமாகியுள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.