மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பலரின் கனவு கன்னி நடிகை ரம்பாவின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? அட! இந்த பெயரும் நல்லா இருக்கே!
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாகவும், பலரின் கனவு கன்னியாகவும் இருந்தவர் நடிகை ரம்பா. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் ஆ ஒக்கட்டி அடக்கு என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் உழவன் என்ற திரைப்படம் மூலம் சிறு வேடத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை அடுத்து நவரச நாயகன் கார்த்திக்கிற்கு ஜோடியாக உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதனை அடுத்து அவர் நடித்த அணைத்து படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தொடர்ந்து சினிமாவில் நடித்துவந்த இவர் இந்திரகுமார் பத்மநாதன் என்ற தொழிலதிபரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் பிசியாக உள்ளார் நடிகை ரம்பா. பொதுவாக நடிகைகள் நடிக்க வரும் சமயங்களில் சினிமாவிற்காக தங்களது உண்மையான பெயரை மாற்றிக்கொள்வது வழக்கம்.
நடிகை ரம்பாவும் சினிமாவிற்காக தனது உண்மையான பெயரை மாற்றியுள்ளார். ஆம், நடிகை ரம்பாவின் உண்மையான பெயர் விஜயலக்ஷ்மி. சினிமாவிற்காக தனது பெயரை ரம்பா என மாற்றியுள்ளார் நடிகை ரம்பா.