மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேற லெவல்தான்.. முழு நேர வைல்ட் லைஃப் போட்டோகிராஃபராக மாறிய பிரபல நடிகை.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. முதல் படத்திலேயே இவரது ஹோம்லியான லுக், அசத்தலான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் இவருக்கென ரசிகர்களும் உருவாகினர்.
நடிகை சதா நடித்த படங்கள்
தொடர்ந்து நடிகை சதா அந்நியன், உன்னாலே உன்னாலே, திருப்பதி, வர்ணஜாலம், எதிரி, ப்ரியசகி போன்ற படங்களில் நடித்து முக்கிய நடிகையாக வலம் வந்தார். நடிகை சதா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். துவக்கத்தில் ஹோம்லியாக நடித்த அவர் பின் கவர்ச்சியில் இறங்கி தாராளம் காட்டினார்.
இதையும் படிங்க: விஜயுடன் கைக்கோர்க்கும் சமந்தா.?! இது சூப்பர் தகவலா இருக்கே.?!
பின்னர் பெருமளவில் படங்களில் வாய்ப்புகள் இன்றி இருந்து வந்த நடிகை சதா தற்போது முழுநேர வைல்ட் லைஃப் போட்டோகிராபராக மாறியுள்ளார். அவர் நேரடியாக காட்டிற்குள் சென்று சிங்கம், புலி, யானை மற்றும் பறவைகள் போன்றவற்றை புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அது வைரலாகி வருகிறது.
நடிகை சதா இப்போது முழு நேர "வைல்ட்லைஃப்" போட்டோகிராபராக மாறிவிட்டாராம் pic.twitter.com/JDnMKf2I2i
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) July 2, 2024
இதையும் படிங்க: வெங்கட் பிரபுவுக்கு செக் மேட் வைத்த சிவகார்த்திகேயன்.!! கோட் ரிலீஸ்-க்கு பிறகு கூட்டணி உறுதியாகுமா.?