மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜயுடன் கைக்கோர்க்கும் சமந்தா.?! இது சூப்பர் தகவலா இருக்கே.?!
தி கோட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து இருந்த நிலையில், இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்குப் பிறகு தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்குகின்ற தி கோட் திரைப்படத்தில் நடிக்கிறார்.
தளபதி 69
இதில் அவருடன் நடிகர்கள் பிரபுதேவா, மோகன், பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்குப் பின் அவர் எந்த படத்தில் நடிப்பார் என்பது குறித்த கேள்விகள் எழுந்த நிலையில், இயக்குனர் எச்.வினோத் திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார் இதனை கே வி என் என்ற கன்னட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதையும் படிங்க: வைரலாகும் சமந்தாவின் பதிவு.! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!?
விஜயுடன் சமந்தா
இந்தத் திரைப்படத்தில் நடிக்க கூடிய கலைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இதற்கு இசையமைப்பாளராக அனிருத் இணைக்கப்படுவார் என்றும், இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெங்கட் பிரபுவுக்கு செக் மேட் வைத்த சிவகார்த்திகேயன்.!! கோட் ரிலீஸ்-க்கு பிறகு கூட்டணி உறுதியாகுமா.?