மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் அந்த மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன்... நடிகை சதா ஓபன் டாக்!! எந்த படத்தில் தெரியுமா.?
தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஜெயம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை சதா. அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் போன்ற சூப்பர் ஹூட் படங்களிலும் நடித்துள்ளார்.
சதா தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். சிறிது காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த சதா மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தற்போது தனக்கு படத்தில் நிகழ்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதாவது தேஜா படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் தனது கன்னத்தில் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. அந்த காட்சியில் நடித்து விட்டு வீட்டிற்கு சென்று பயங்கரமாக அழுதேன். அந்த மாதிரியான மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து இப்போது வரை வருத்தப்படுகிறேன் என சதா கூறியுள்ளார்.