ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
நடத்தை சந்தேகத்தால் விபரீதம்; 3 வயது சிறுமியை கழுத்து நெரித்துக்கொன்ற தந்தை.!

சென்னையில் உள்ள மண்ணடி பகுதியில் வசித்து வருபவர் அகரம் ஜாவித் (வயது 33). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார்.
இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஜாவீத்தின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததில் இருந்து அகரம் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு இருந்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: சென்னையில் 1 மணிநேரத்திற்குள் 7 இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு.. வலிமை திரைப்பட பாணியில் பயங்கரம்.!
நடத்தை சந்தேகம்
இதுதொடர்பான தகராறு அவ்வப்போது தம்பதிகள் இடையே தொடர்ந்து வந்த நிலையில், சில நேரம் குழந்தை எனக்கு பிறக்கவிலை எனவும் வாக்குவாதம் செய்துள்ளார்.
குழந்தை கொலை
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த ஜாவித் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து, தனது குழந்தையின் கழுத்தை நெரித்தார். இந்த சம்பவத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தகவல் அறிந்த மண்ணடி காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அகரம் ஜாவீத்தை கைது செய்தனர்.
இதையும் படிங்க: Chennai: அலட்சியத்தால் சோகம்.. ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ்.. ஸ்விட்சை தொட்டதும் பறிபோன உயிர்.!