திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பீரியட்ஸ்னு கூட பாக்கலை.. நடந்தது இதுதான்! திருமணமான ஒரு மாதத்திலேயே கணவரை பிரிந்த நடிகை சம்யுக்தா விளக்கம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் ஒன்றாக நடித்த நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் திருமணமான ஒரு மாதத்திலேயே பிரிந்து விட்டனர். இந்த நிலையில் தாங்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்கள், திருமண புகைப்படங்கள் ஆகியவற்றை சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து இருவரும் டெலிட் செய்துவிட்டனர்.
மேலும் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எங்களது இருவரது பிரச்சனைக்கும் காரணம் சம்யுக்தாவின் தந்தைதான் என நடிகர் விஷ்ணுகாந்த் விளக்கமளித்த நிலையில் இதுகுறித்து நடிகை சம்யுக்தாவும் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, எனது விருப்பப்படி திருமணத்தில் எதுவுமே நடக்கவில்லை. நான் விஷ்ணுகாந்துக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். திருமண செலவுகளை அவர்தான் செய்தார். அதனால் அவருக்கு பிடித்தது போல திருமண இன்விடேஷன் அடித்திருந்தார். ஆனால் அது பழைய மாடல். அதனால் எனது நண்பர்களுக்கு கொடுப்பதற்கு மட்டும் நான் வேறுமாதிரி இன்விடேஷன் அடித்திருந்தேன். அப்பொழுது எங்களுக்கு பிரச்சினை வந்துவிட்டது.
திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என் போன்காலை விஷ்ணுகாந்த் எடுக்கவில்லை. இரண்டு நாட்கள் அவரை வீட்டிலும் காணவில்லை. அப்போதே நான் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தேன். பின் சமாதானமாகி எங்களது திருமணம் நடைபெற்றது. பின் ஒரு மாதம் சேர்ந்து வாழ்ந்தோம். சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் வீட்டை விட்டு போய்விடு என விஷ்ணுகாந்த் கூறுவார்.
எனது அப்பாவை வரவைத்து அனுப்பி வைத்து விடுவார். கடைசியாக வரும்போது நான் பீரியட்ஸில் இருந்தேன். அந்த டைமில் எனக்கு அதிகமான வலி இருக்கும். வலியால் துடித்திருக்கிறேன். அந்த நிலையிலும் அவர் என்னை வீட்டை விட்டு எங்க அப்பாவோட போக சொல்லிவிட்டார் என சம்யுக்தா கூறியுள்ளார்.