மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. 51 வயதில் என்னவொரு நடனம்! பரத நாட்டியத்திலேயே குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் இது நம்ம ஆளு. இந்த திரைப்படத்தில் பாக்யராஜ்க்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷோபனா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ஷோபனா தமிழ் மட்டுமின்றி
மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் இறுதியாக போடா போடி மற்றும் கோச்சடையான் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஷோபனா நடிகை மட்டுமின்றி புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் பரதநாட்டியத்தில் பல சாதனைகள் படைத்து ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஷோபனா அவ்வப்போது தனது நடன வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் 51 வயது நிறைந்த அவர் தற்போது குத்துபாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய செம அசத்தலான வீடியோவை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.