மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட வாய்ப்பிற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிய சோனியா அகர்வால்! இப்போ எப்படி இருக்கார் பாருங்க
நடிகை சோனியா அகர்வால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளநிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
தனுஷ் நடித்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, விஜய் நடித்த மதுர உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சோனியா அகர்வால். ஒருசில படங்களே நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருந்தது. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பின் இயக்குனர்செல்வராகவனை திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் திருமண வாழ்க்கை நீண்ட வருடம் நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்றார். அதன்பின் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய சோனியா அகர்வால் தற்போது சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
ஆனாலும் அவருக்கு போதிய வாய்ப்புகள் வராததால் படவாய்ப்பிற்காக அவர் தற்போது தன்னுடைய முகம் மற்றும் உடலிலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய புது தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகிறார்கள்.