#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உறைய வைக்கும் ஐஸ் கட்டி தொட்டியில் படுத்திருந்த சுனைனா.! இவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி.!?
பொதுவாக திரைத்துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள் ரசிகர்களை கவர்வதற்காகவோ அல்லது பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலோ தொடர்ந்து ரசிகர்களை கவர பல விதமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதன்படி நடிகை சுனைனா தற்போது உறைய வைக்கும் குளிரில் ஐஸ் கட்டி தொட்டியில் குளியல் செய்வது போல புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
நடிகை சுனைனா முதன்முதலில் 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றியடைந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படத்திற்குப் பின்பு தொடர்ந்து தமிழில் பல நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கான தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டினார்.
இவர் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன், மாசிலாமணி, யாதுமாகி, பாண்டி ஒலிபெருக்கி நிலையம், ரெஜினா, சமர், நீர்ப்பறவை, வன்மம், வம்சம், தெறி, கவலை வேண்டாம், நம்பியார், எனை நோக்கி பாயும் தோட்டா, காளி, சில்லு கருப்பட்டி, ட்ரிப் என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வந்தார்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வந்து நடிகை சுனைனா சமீபத்தில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து போட்டோ ஷூட் செய்து பதிவிட்டு வருகிறார். தற்போது ஐஸ் பாத் சேலஞ்ச் என குளியல் தொட்டியில் முழுவதுமாக ஐஸ்கட்டிகளை நிரப்பி அதில் படுத்து புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.