பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
நைட் பார்ட்டி.. ஆண் நண்பருடன் 45 வயது பிரபல நடிகை முத்தமழை.! லீக்கான புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரேகா வாணி. அதனைத் தொடர்ந்து அவர் காதலில் சொதப்புவது எப்படி, தெய்வமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழை விட தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து பிரபல நடிகையாக உள்ளார்.
இவரது கணவர் சுரேஷ் தேஜா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவர்களுக்கு சுப்ரியா என்ற மகள் உள்ளார். பின் நடிகை சுரேகா வாணி தனது மகள் சம்மதத்துடன் தன்னைவிட 10 வயது குறைந்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவியது.
ஆனால் இதுகுறித்து சுரேகா வாணி எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் தற்போது 45 வயதாகும் அவர் நைட் பார்ட்டி ஒன்றில் ஆண் நண்பருடன் நெருக்கமாக முத்த மழை பொழிவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.