கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல நடிகை திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா. இவர் தனது 43ஆவது வயதில், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி காலமானார். முன்னதாக இவர் 2011ம் ஆண்டு பிரேசிலியன் பட் அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சில்வினா லூனா கடந்த 79 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2011ம் ஆண்டு சில்வினா செய்து கொண்ட காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை காரணமாக, சில்வினா லூனாவின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 31ம் தேதி வியாழக்கிழமை, சில்வினா லூனாவின் சகோதரர், எசேகுவேல் லூனா, சில்வினாவை வென்டிலேட்டரில் இருந்து அகற்ற மருத்துவர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தொடர்ந்து அவரது வழக்கறிஞர் பெர்னாண்டோ பர்லாண்டோ , "வலியும், வேதனையும் தரும் ஒரு முடிவு இது" என்று சில்வினா லூனாவின் முடிவைப் பற்றி பதிவிட்டுள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.