மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தொழிலதிபரை கரம் பிடிக்கும் வரலட்சுமி.. வைரல் புகைப்படங்கள்!
பிரபல நடிகை வரலட்சுமிக்கும், மும்யைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சஸ்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது
தமிழ் சினிமாவில் கடந்த 2012ம் ஆண்டு "போடா போடி" திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாருக்கும், அவரது முதல் மனைவி சாயாவுக்கும் மகளாகப் பிறந்தார். மேலும் வரலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் இதுவரை தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா , சர்க்கார், மாரி 2, நீயா 2, கன்னி ராசி, இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி, கன்னித்தீவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை வரலட்சுமி, மும்யைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிகோலய் சஸ்தேவ் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இதனையடுத்து இவர்களது நிச்சயதார்த்தம் மும்பையில் நேற்று நடைபெற்றுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.