மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சரத்குமாரின் மகள் தான் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை" நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வைரலாகும் பேட்டி..
கோலிவுட் திரை உலகில் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே பெரிதளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை.
இப்படத்திற்கு பிறகு தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திரர் நடிகையாகவும் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷனில் பத்திரிக்கையாளர் பேட்டியில் கலந்து கொண்ட வரலட்சுமி அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருக்கிறார்.
அப்பேட்டியில் வரலட்சுமி சரத்குமார், "சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து நடிகைகளிடம் கேட்டால் உடனே மறுப்பு தெரிவிக்க வேண்டும். நான் மட்டுமே அதை செய்து வந்தால் இந்த பிரச்சனை சரியாகாது. மேலும் நான் சினிமாவில் தேடும்போது சரத்குமாரின் மகள் என்று தனியாக கூறுவதை விட என் அடையாளத்தையே கூற விரும்புகிறேன்" என்று பதிலளித்தார்.