மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை வரலட்சுமி திருமணம்.! அதுவும் எங்கு தெரியுமா?? வைரலாகும் புகைப்படங்கள்!!
சினிமாதுறையில் அதிரடியான நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி. இவர் முன்னணி நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். இவர் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
சினிமாதுறையை கலக்கிய வரலட்சுமி
பின்னர் வரலட்சுமி தொடர்ந்து பல படங்களில் அசத்தலாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். மேலும் அவர் ஹீரோயினாக மட்டுமின்றி வில்லியாகவும் அவதாரமெடுத்து டாப் நடிகர்களின் படங்களில் மிரட்டியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் எப்பொழுது என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையும் படிங்க: எப்படியிருந்தவர் இப்படியாகிட்டாரே.. திருமணத்திற்கு பின் மனைவிக்காக பிரேம்ஜி செய்த காரியம்.! வைரல் வீடியோ!!
தாய்லாந்தில் நடந்து முடிந்த திருமணம்
அதாவது நடிகை வரலட்சுமிக்கு நிக்கோலை சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் அண்மையில் சென்னையில் அவர்களது மெஹந்தி, சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் அந்த ஜோடிக்கு தாய்லாந்தில் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அட.. நடிகை ரம்யா கிருஷ்ணன் திருமணத்தின்போது எப்படியுள்ளார் பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!