மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் சூர்யா - ஜோதிகா ஜோடி.!! விரைவில் வெளியாக இருக்கும் அப்டேட்.!!
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக திகழ்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. தமிழ் சினிமாவில் இளம் நாயகர்களாக அறிமுகமான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
நிஜ வாழ்வில் காதலர்கள் ஆனா இவர்கள் இருவரும் சினிமாவிலும் ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களது நடிப்பில் உருவான பூவெல்லாம் கேட்டுப்பார் உயிரிலே கலந்தது காக்க காக்க மாயாவி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
திருமணத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். திருமணத்திற்கு பின்பு ஜோதிகா திரைப்படங்களில் நடிக்கவில்லை. சில காலம் கழித்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடி 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைய இருக்கிறது. சில்லு கருப்பட்டி திரைப்படத்தை இயக்கிய காலிதா சமீம் இயக்கும் புதிய திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது