மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது மனைவியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் அஜித் பட நடிகர்.. காரணம் தெரிந்தால் ஷாக்காகிடுவீங்க.!
தமிழ் மற்றும் மலையாள மொழி நடிகரான பாலா முதன்முதலாக 2003ஆம் ஆண்டு வெளியான 'அன்பு' என்ற திரைபடத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பின் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கம், மஞ்சள் வெயில் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழில் இவர் நடித்த வீரம், தம்பி, அண்ணாத்தே போன்ற திரைபடங்களில் நடிகர் பாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் 2021 ஆம் வருடம் டாக்டர் எழிசபெத் உதயன் என்பவரை.இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இதுபோன்ற நிலையில், சமீபத்தில் நடிகர் பாலாவுக்கு கல்லீரலில் பிரச்சினை ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிருந்தனர். இவரின் அண்ணன் சிறுத்தை சிவா இவரை காண மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்தார். இதன்பின், அவரது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் "எனக்கு இன்னும் சில தினங்களில் முக்கியமான அறுவைசிகிச்சை நடைபெறவிருக்கிறது. அதன்பின் நான் பிழைப்பேனா இல்லையா என்று தெரியவில்லை. உங்கள் வேண்டுதல் தான் என்னை காப்பாற்ற வேண்டும்" என்று ரசிகர்களிடம் கூறினார். மேலும் தன் மனைவியிடம் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டால் டாக்டரை திருமணம் செய். என்னைபோல் நடிகரை திருமணம் செய்து கொள்ளாதே என்று அவர் கூறிய அந்த வீடியோ ரசிகர்களின் மனதில் கலக்கத்தைக் ஏற்படுத்தியது.