பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆல்யா மானசா தனது குழந்தையை முதன் முறையாக கையில் ஏந்தும் தருணம்... வைரல் வீடியோ.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. ராஜாராணி தொடரில் கணவன், மனைவியாக நடித்து வந்த இருவரும் நிஜத்திலும் காதலிக்க தொடங்கி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஐலா என்று பெயர் வைத்தனர். இந்நிலையில் தற்போது ஆல்யா மற்றும் சஞ்சீவ்க்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அக்குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஆல்யா முதன்முறையாக தனது குழந்தையை கையில் ஏந்தும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அவ்வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.