மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராஜாராணி 2 தொடரில் இருந்து விலகும் பிரபல முக்கிய நடிகை! அவருக்கு பதில் நடிக்கப்போவது இவரா?? தீயாய் பரவும் புகைப்படம்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சீரியல்கள் ஏராளம். அவ்வாறு தற்போது விறுவிறுப்பாகவும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர் ராஜாராணி 2. இத்தொடருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொடரில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் சித்து மற்றும் ஹீரோயினாக சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடிக்கின்றனர்.
ராஜாராணி முதல் சீசனிலும் ஆலியா மானசாதான் ஹீரோயினாக நடித்தார். மேலும் ஹீரோவாக சஞ்சீவ் நடித்தார். இந்த நிலையில் தொடரில் கணவன் மனைவியாக நடித்த இருவரும் உண்மையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகள் உள்ளார். இந்த நிலையில் ஆலியா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவருக்கு இந்த மாத இறுதியில் குழந்தை பிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராஜாராணி 2 தொடரில் நடித்து வரும் அவர் தற்காலிகமாக சில காலங்கள் சீரியலில் நடிப்பதிலிருந்து விலகி இடைவெளி விடவுள்ளாராம். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சந்தியா கேரக்டரில் ஆலியாவே நடிப்பாராம். இந்த நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் புதிய நடிகை ஒருவர் நடிக்கிறார். அவரது புகைப்படம் என ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.