#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் நடிகர் அமிதாப் பச்சன் மகளுக்கு கொடுத்த கிப்ட்.! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா??
பாலிவுட் சினிமாவில் 50 வருடங்களை கடந்து மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி பிரபலமாக வலம் வருபவர் அமிதாப் பச்சன். ஏறக்குறைய 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் தற்போது ஹிந்தியில் கல்கி என்ற படத்திலும், தமிழில் நடிகர் ரஜினியின் 170 வது படத்திலும் நடித்து வருகிறார்.
அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனும் நடிகை ஆவார். அவரது மகன் நடிகர் அபிஷேக் பச்சன். மகள் ஸ்வேதா பச்சன். திரைத்துறையில் கொடி கட்டி பறக்கும் அமிதாப் பச்சன் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு 3000 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமிதாப்பச்சன் தனது மகள் ஸ்வேதா பச்சனுக்கு மும்பை ஜூஹூ பங்களாவை பரிசாக கொடுத்துள்ளாராம். இதன் மதிப்பு 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது அமிதாப்பச்சன் சினிமாவிற்கு வந்த பின் முதன்முதலாக வாங்கிய வீடாம். தனது பெயரில் இருந்த வீட்டை அவர் தனது மகளுக்கு மாற்றி கொடுத்துள்ளார்.