மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.! தொகுப்பாளினி டிடியின் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரச்சினையா.? ரசிகர்கள் சோகம்.!
"டி டி" என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விசில், நளதமயந்தி,காபி வித் காதல், சர்வம் தாளமயம், பா பாண்டி போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் , இவர் கலந்துகொண்ட பேட்டியொன்றில் தனக்கு இருக்கும் பிரச்சனை பற்றி கூறியிருந்தார். அதில் " எனக்கு சில காலமாக சிறிய அளவில் மூட்டு வலி இருந்தது. இந்தப் பிரச்னைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால் அது தவறாகப் போய்விட்டது" என்று கூறினார்.
மேலும் அவர் ,"அந்த பிரச்சனையை சரி செய்ய மேலும் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டேன். அதற்குள் என் மூட்டுவலி பிரச்சனை அதிகமாகிவிட்டது. இந்த மூட்டுவலிப் பிரச்சனை இனி என் காலம் முழுவதும் என்னுடன் இருக்கும். இதை இனி சரி செய்ய முடியாது. இதனோடு வாழப் பழக வேண்டும் என்று புரிந்து கொண்டேன்" என்று கூறினார்.
இதன்காரணமாக தான் டிடி மேடை நிகழ்ச்சிகளிலும், நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்றும் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி இணையவாசிகள் வருத்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.