96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
Breaking: அங்காடித்தெரு நடிகை சிந்து மார்பக புற்றுநோயால் காலமானார்; மரணப்படுக்கையில் உயிர்நீத்த நடிகை.!
அங்காடி தெரு திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சிந்து. இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும், அங்காடி தெரு திரைப்படம் நல்ல கவனத்தை பெற்று கொடுத்தது.
பல ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் அவர் அவதிப்பட்டு வந்த நிலையில், திரைஉலகத்திடம் உதவி கேட்டு இருக்கிறார். நல்லுள்ளம் கொண்டோர் சிலர் தங்களால் இயன்ற உதவியை செய்தனர்.
உதவி செய்வதாக அழைத்த ஒருவரோ ஒருபக்கம் மார்பகம் தானே கேன்சர், இன்னொன்றை காட்டு என கூறியிருந்ததாக கண்ணீர் மல்க சிந்து தனது நிலையை விவரித்து இருக்கிறார்.
கொரோனா காலகட்டத்தில் பல மக்களுக்கு உணவு வழங்கி உதவி செய்திருந்தார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த சிந்து, கடந்த சில மாதமாகவே படுத்த படுக்கையாகி உணவாக கஞ்சி மட்டுமே எடுத்து வந்தார்.
இந்நிலையில், நடிகை சிந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரின் உயிர் இன்று பிரிந்தது. இவரின் மறைவு பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.