பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பப்பு.. ரொம்ப முக்கியமான நாள்., உன்கூட இருக்க முடியல - அனிதா சம்பத் வெளியிட்ட உருக்கமான பதிவு..!!
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் அனிதா சம்பத். இவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் இணைந்து வெற்றி பெற்றார். இதன்பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட அனிதா தனது பேச்சாளும், செயலாலும் ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளானார்.
இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கத்தில சுறுசுறுப்பாக இயங்கி வருவார். இந்த நிலையில் நேற்று அவரது திருமண நாள் என்பதால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாட்டு பாடி 6 வருட காதல் திருமணத்திற்கு பரிசாக பழைய புகைப்படங்களை சேர்த்து, கேப்ஷனில் வாழ்க்கையில் நடந்ததை கவிதையாய் பொழிந்துள்ளார்.
அதில், "முக்கியமான நாளில் ஒன்றாக இருக்க முடியாமல் வேற நாட்டில் அமர்ந்து இதை எழுதுவேன் என்று நினைத்து கூட பார்க்கல" என்று உருக்கத்துடன் கவிதை எழுதி பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் நல்ல கணவர் கிடைப்பது வரம் என்பது போல், நல்ல மனைவி அமைவதும் தவம். நீங்கள் இருவரும் நீண்ட நாள் வாழ வேண்டும்" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.