மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அனுஷ்காவின் 50வது படத்தின் இயக்குனர் இவரா? வெளியான அசத்தல் தகவல்!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பெயர் பெற்றிருந்தார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவ்வாறு பல மொழிகளிலும் பிஸியாக இருந்து வந்த அனுஷ்கா தன் தலையிலேயே மண்ணள்ளி போட்டது போல் "இஞ்சி இடுப்பழகி" என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்காக உடல் எடை அதிகமான அனுஷ்காவினால் இப்படத்திற்கு பின்பு உடல் எடையை குறைக்க முடியவில்லை.
மேலும் "பாகுபலி திரைப்படத்தில் முன்னதாகவே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனுஷ்கா. ஆனால் உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தால் பாகுபலி படத்தில் சிஜி வேலை வாய்ப்புகள் மூலம் அவரை நடிக்க வைத்தார்.
அதன் காரணமாக சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்த நிலையில் தற்போது அனுஷ்காவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது இவர் தனது 50வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இயக்கி வருகிறார்.