மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகையின் தங்கையை திருமணம் செய்யும் அசோக் செல்வன்.!
நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையான கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அசோக் செல்வன் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் அருண்பாண்டியனின் மூன்றாவது மகளான கீர்த்தி பாண்டியனுக்கும், அசோக் செல்வனுக்கும் செப்டம்பர் மாதம் திருநெல்வேலியில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்த போது நட்பாக பழகிய இருவரும் நாளடைவில் காதலித்துள்ளனர். இந்த காதலுக்கு இரு வீட்டார் சம்மதம் தெரிவித்த நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இது குறித்த அதிகாரப்பூர்வ திருமண தேதியை இரு வீட்டார் தரப்பிலிருந்தும் அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது. நடிகர் அருண்பாண்டியனின் சகோதரர் மகள் தான் ரம்யா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.