மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்த அசோக் செல்வன்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்.!
நடிகை கீர்த்தி பாண்டியன் -அசோக் செல்வன் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அசோக் செல்வன் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. அதன்படி நடிகர் அருண்பாண்டியனின் மூன்றாவது மகளான கீர்த்தி பாண்டியனுக்கும்-அசோக் செல்வனுக்கும் இன்று திருநெல்வேலியில் திருமணம் நடைபெற்றுள்ளது.
ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்த போது நட்பாக பழகிய இருவரும் நாளடைவில் காதலித்துள்ளனர். இந்த காதலுக்கு இரு வீட்டார் சம்மதம் தெரிவித்த நிலையில், குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்க திருநெல்வேலியில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.