#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அவருக்கிட்ட கேட்டாக்கூட...." 2வது திருமணம் பற்றி... வில்லன் நடிகரின் முதல் மனைவி பேட்டி.!
இந்திய சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக இருப்பவர் ஆஷிஷ் வித்யார்த்தி. தமிழ் சினிமாவிலும் பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டி இருப்பார். விஜய் விக்ரம் என முன்னணி ஹீரோகளுக்கு வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர்.
விஜய்க்கு தந்தையாக இவர் நடித்த கில்லி திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஏற்கனவே திருமணமான இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு ரூபாலி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இவரது இரண்டாவது திருமணம் தொடர்பாக பல்வேறு கதைகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வந்த நிலையில் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் அவரது முதல் மனைவியை சந்தித்து பேட்டி கண்டது. இதுகுறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் அவரது முதல் மனைவி பிலு வித்யார்த்தி.
இது குறித்து பேசி இருக்கும் அவர் நானும் ஆஷிஷ் வித்யார்த்தியும் 22 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம் . அவர் மிகவும் நல்ல மனிதர். அவரிடம் கேட்டாலும் இதையே தான் சொல்லுவார். எங்கள் இருவருக்கும் பொதுவான கருத்துக்கள் நிறைய இருந்தன. இருந்தாலும் மனிதர்கள் என்றால் வேறுபட்ட கருத்துக்களும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதற்காக நாங்கள் இருவரும் ஒருமுறை கூட சண்டை போட்டுக் கொண்டதில்லை. எங்கள் இருவருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருந்தன. எங்களுக்கு அழகான ஒரு மகன் இருக்கிறான். ஆஷிஷ் என்னை ஒருபோதும் ஏமாற்றியதில்லை என மனம் திறந்து பேட்டி அளித்திருக்கிறார் அவரது முதல் மனைவி.