மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அயோத்தி திரைப்படம் என்னுடைய கதை.. பிரபல எழுத்தாளர் குமுறல்.!
இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், புகழ், போஸ் வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அயோத்தி. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றி படமாகவும் அமைந்தது.
ஆனால் இந்த திரைப்படம் வெளியானதில் இருந்து கதை என்னுடையது என பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. எழுத்தாளர்கள் நரேன் மற்றும் மாதவராஜ் ஆகியோர் தங்கள் கதைகளில் இருந்து திருவி விட்டதாக புகார் கூறியிருந்தனர்.
இதனையடுத்து படத்தின் திரைக்கதையில் தான் பணியாற்றியதாகவும் ஆனால் தன்னுடைய பெயர் இடம் பெறவில்லை என்று சங்கரதாஸ் என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் தற்போது எழுத்தாளர் மில்லத் அகமது என்பவர் தன்னுடைய குறும்படத்தின் கதையைத் திருடி தான் அயோத்தி படம் எடுத்துள்ளதாக ஒரு பட விழாவில் கூறியுள்ளார்.