Siragadikka Aasai: "உண்மைய சொல்லிடுவேன்" - ஷாக் கொடுத்த சிங்கப்பூர் மாமா.. அதிர்ச்சியில் ரோகினி.!



 Siragadikka Aasai Promo Today on 1 Dec 2024 

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களில், தற்போது மக்களின் பேராதரவை பெற்றுள்ள சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai Promo), தொடர்ந்து பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, அணிலா ஸ்ரீகுமார், சுந்தர்ராஜன், சுருதி, ஸ்ரீதேவா உட்பட பலர் நடித்து வருகின்றனர். 

சிங்கப்பூர் மாமா

இந்நிலையில், ரோகினி ஏற்பாடு செய்த சிங்கப்பூர் மாமாவின் இறைச்சிக்கடையில் மீனா இறைச்சி வாங்கினார். அங்கு சாதுர்யமாக மாமா தப்பித்துவிட, அந்த தகவலை அவர் ரோஹிணியிடம் தெரிவித்தார். மேலும், ரோகினி தான் செய்வது தெரியாமல் திகைத்தார். 

இதையும் படிங்க: சன் டிவியில் சான்ஸ்.! மகாநதி சீரியலில் இருந்து விலகிய பிரபலம்.! இனி அவருக்கு பதில் இவர்தானா!!

தவிப்பில் ரோகினி

அப்போது, சிங்கப்பூர் மாமா, எதோ கஷ்டத்திற்காக தான் நான் நடிக்க வந்தேன். எனது பிழைப்புக்கு அது பிரச்சனையை ஏற்படுத்தினால், நான் கட்டாயம் உண்மையை சொல்லிவிடுவேன் என அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் ரோகினி தவிக்கிறார். 

ரோகினி தனது உண்மையை மறைக்க முத்து-மீனா ஜோடியை விஜயாவிடம் இழுத்துவிட்டு அசிங்கப்படுத்தி வரும் நிலையில், ரோகினி எப்போது சிக்குவார் என ஒட்டுமொத்த விஜய் டிவி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: "உன்னைத்தாண்டித்தான் எனக்கு எதுவுமே" - காவேரிக்கு பச்சைக்கொடி காட்டிய மகாநதி விஜய்.!