Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
தோற்றத்தில் அப்படியே நயன்தாரா போலவே மாறிய நடிகர் அஜித்தின் மகள்.! வைரலாகும் புகைப்படம் உள்ளே.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போல உடை அணிந்து நடிகை அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.
தல அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிங்கர்கள் மத்தியில் பிரபலமானானவர் பேபி அனிகா. என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களுக்கு பிறகு ரசிங்கர்கள் இவரை தல அஜித்தின் மகள் எனவே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் என்னவோ இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் உடனே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்துவிடுகிறது. இந்நிலையில் நடிகை அனிகா தற்போது கவுன் போட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் செம வைரலாகிவருகிறது.
காரணம், அந்த புகைப்படங்களில் அவர் பார்ப்பதற்கு அப்படியே நயன்தாரா போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருசிலர் இவரை பாராட்டி வந்தாலும், இந்த வயதில் இப்படியெல்லாம் போஸ் தேவையா என விமர்சித்தும் வருகின்றனர்.